search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நீரில் மூழ்கி பலி"

    • பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர். அப்போது காக்காபாளையம் குட்டையில் சகோதரர்களின் சைக்கிள் மற்றும் உடைகள் கிடந்தன.
    • குட்டையில் குளிக்க சென்ற அண்ணன்- தம்பி ஆகிய 2 பேரும் நீரில் மூழ்கி பலியான சம்பவம் அந்த பகுதியினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    அன்னூர்:

    கோவை மாவட்டம் அன்னூர் அடுத்த காக்காபாளையத்தை சேர்ந்தவர் சந்தோஷ்குமார். கட்டிட தொழிலாளி. இவரது மனைவி மணிமேகலை. இவர்களுக்கு தீபக்குமார் (வயது 10), வெற்றிவேல் (8) ஆகிய 2 மகன்கள் இருந்தனர்.

    காக்காபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தீபக்குமார் 5-வது வகுப்பும், வெற்றிவேல் 3-வது வகுப்பும் படித்து வந்தனர். இந்த நிலையில் அண்ணனும், தம்பியும் அங்குள்ள ஒரு குட்டையில் குளிப்பதற்காக, சைக்கிளில் வெளியே புறப்பட்டு சென்றனர். அதன்பிறகு அவர்கள் வீடு திரும்பவில்லை. எனவே பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர். அப்போது காக்காபாளையம் குட்டையில் சகோதரர்களின் சைக்கிள் மற்றும் உடைகள் கிடந்தன.

    எனவே சந்தோஷ்குமார் உறவினர்களுடன் குட்டைக்குள் இறங்கி தேடி பார்த்தார். அப்போது தீபக்குமார், வெற்றிவேல் தண்ணீருக்குள் மூழ்கி மயங்கி கிடப்பது தெரியவந்தது. எனவே 2 பேரையும் உறவினர்கள் மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதனை செய்த டாகடர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்து உள்ளனர்.

    இதனை தொடர்ந்து தீபக்குமார், வெற்றிவேல் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. குட்டையில் குளிக்க சென்ற அண்ணன்- தம்பி ஆகிய 2 பேரும் நீரில் மூழ்கி பலியான சம்பவம் அந்த பகுதியினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • நீச்சல் தெரியாததால் இருவரும் கல்குவாரியில் ஓரமாக நின்று குளித்தனர்.
    • கல்குவாரிக்குள் மூழ்கி கிடந்த விஜயலட்சுமி, பூங்கொடி ஆகிய இருவரது உடல்களையும் தீயணைப்பு வீரர்கள் மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.

    மேலூர்:

    திண்டுக்கல் மாவட்டம் சிலுவத்தூர் வி.எஸ்.குரும்பப்பட்டியை சேர்ந்தவர் பழனியப்பன். இவரது மகள்கள் விஜய லட்சுமி(வயது48), பூங்கொடி(45).

    இவர்களில் விஜய லட்சுமிக்கு திருமண மாகவில்லை. பூங்கொடிக்கு திருமணமாகி விட்டது. அவர் தனது கணவர் சின்னையா மற்றும் மகன் பகவதி(23), சந்தியா(19) ஆகியோருடன் அதே ஊரில் வசித்து வந்தார்.

    விஜயலட்சுமியும், பூங்கொடியும் சமையல் வேலை பார்த்து வந்தனர். அவர்கள் உள்ளூர் மட்டு மின்றி வெளியூர்களுக்கும் சமையல் வேலைக்காக சென்று வந்திருக்கின்றனர்.அதேபோல் நேற்று மதுரை ஒத்தக்கடை அருகே உள்ள சிதம்பரம்பட்டி கிராமத்திற்கு சமையல் வேலைக்காக வந்துள்ளனர்.

    அப்போது அவர்கள் ஒத்தக்கடையில் உள்ள நரசிங்கபெருமாள் கோவிலுக்கு சாமி கும்பிட செல்ல திட்டமிட்டனர். இதற்காக அந்த பகுதியில் உள்ள கல்குவாரிக்கு நேற்று மாலை குளிக்க சென்றனர்.நீச்சல் தெரியாததால் இருவரும் கல்குவாரியில் ஓரமாக நின்று குளித்தனர்.

    அப்போது அவர்களில் ஒருவர் திடீரென ஆழமான பகுதிக்கு சென்றுவிட்டார். இதனால் அவர் தண்ணீரில் மூழ்கி தத்தளித்தார். இதனை பார்த்த மற்றொருவர் அவரை காப்பாற்ற முயன்றுள்ளார்.அப்போது அவரும் ஆழமான பகுதிக்கு சென்றுவிட்டார்.

    இதனால் இருவரும் தண்ணீரில் தத்தளித்தப்படி இருந்தனர். பெண்கள் இருவர் தண்ணீரில் தத்தளித்ததை அந்த பகுதியில் நின்றுகொண்டிருந்தவர்கள் பார்த்தனர். இருவரையும் அவர்கள் காப்பாற்ற முயன்றனர். ஆனால் அதற்குள் இருவரும் தண்ணீரில் மூழ்கி விட்டனர்.

    இதுகுறித்து மதுரை தல்லாகுளம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நிலைய அலுவலர் அசோக்குமார் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கல்குவாரியில் இறங்கி தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

    2 மணி நேரத்திற்கு மேலாக தேடியும் இருவரும் கிடைக்கவில்லை. பின்பு இரவு வெகுநேரம் ஆகி விட்டதால் தேடுதல் பணி நிறுத்தப்பட்டது. சகோதரிகள் இருவரும் கல்குவாரியில் மூழ்கிய தகவல் அறிந்த அவர்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் நேற்று இரவே ஒத்தக்கடை பகுதிக்கு வந்தனர்.

    மேலும் ஏராளமான பொதுமக்களும் கல்குவாரியில் திரண்டனர். அவர்களின் முன்னிலையில் தீயணைப்பு வீரர்கள் இன்று காலை மீண்டும் தேடுதல் பணியில் ஈடுபட்டார்கள். ஒத்தக்கடை போலீசாரும் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

    இந்நிலையில் கல்குவாரிக்குள் மூழ்கி கிடந்த விஜயலட்சுமி, பூங்கொடி ஆகிய இருவரது உடல்களையும் தீயணைப்பு வீரர்கள் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். சகோதரிகளின் உடலை பார்த்து அவர்களது குடும்பத்தினர் கதறி அழுதனர்.

    இதனை தொடர்ந்து இருவரது உடலையும் பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து ஒத்தக்கடை போலீஸ் இன்ஸ்பெக்டர் புகழேந்தி, சப்-இன்ஸ்பெக்டர் சேது மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சமையல் வேலைக்கு வந்த இடத்தில் கல்குவாரியில் மூழ்கி அக்காள்-தங்கை பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • உறவினர்கள் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து அறிவழகனின் உடலை பார்த்து கதறிஅழுதனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை அடுத்த அயலாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சாந்தமூர்த்தி. இவரது மனைவி தேவி. இவர்களுக்கு அறிவழகன் (வயது23) என்ற மகன் உள்ளார். இவர் தனியார் பொறியியல் கல்லூரியில் பி.இ., படித்து வந்தார்.

    இந்த நிலையில் மத்தூரில் உள்ள தனது அக்கா வீட்டிற்கு அறிவழகன் வந்தார். நேற்று மாலை தனது அக்கா மகன்கள் மற்றும் உறவினர்களுடன் அறிவழகன் பாம்பாறு தடுப்பணைக்கு சென்றார். அங்கு அவர்கள் தடுப்பணையின் கரையோரமாக நீரில் குளித்து மகிழ்ந்தனர். இதில் நீச்சல் தெரியாத அறிவழகன் ஆழமான பகுதிக்கு சென்றுவிட்டார். அப்போது உடன் உறவினர்கள் அவரை காப்பாற்ற முயற்சித்தனர். அதற்குள் அறிவழகன் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த மத்தூர் போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு வந்து நீரில் மூழ்கி இறந்துபோன அறிவழகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து தகவலறிந்து உறவினர்கள் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து அறிவழகனின் உடலை பார்த்து கதறிஅழுதனர்.

    மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கிணற்றில் கன்னியப்பன் பிணமாக மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
    • திருக்கழுக்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாமல்லபுரம்:

    திருக்கழுக்குன்றம் அடுத்த ஆனூர் பகுதி வெண்பாக்கத்தை சேர்ந்தவர் கன்னியப்பன் (வயது82). இவர், அப்பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் குளிப்பது வழக்கம்.

    இந்த நிலையில் குளிக்க சென்ற கன்னியப்பன் நீண்ட நேரம் வரை திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் கிணற்றில் கன்னியப்பன் பிணமாக மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து திருக்கழுக்குன்றம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் விரைந்து வந்து கன்னியப்பனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.இது குறித்து திருக்கழுக்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தேனி ரெயில் நிலையம் அருகே இருந்த தற்காலிக குட்டையில் சிறுவர்களின் உடல் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • குட்டை மற்றும் நீர்நிலைகளில் சிறுவர்கள் மூழ்கி உயிரிழப்பது தொடர் கதையாகி வருவதால் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    திண்டுக்கல்:

    தேனி சமதர்மபுரத்தை சேர்ந்த சிவராஜா மகன் சிவசாந்தன்(12). தேனி கண்ணாத்தாள் கோவில் தெருவை சேர்ந்த ரமேஷ் மகன் வீரராகவன்(12). இவர்கள் 2 பேரும் தேனியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தனர். நண்பர்களான இவர்கள் பள்ளி விடுமுறை என்பதால் நேற்று மாலை விளையாட சென்ற அவர்கள் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

    இந்நிலையில் இன்று காலை தேனி ரெயில் நிலையம் அருகே இருந்த தற்காலிக குட்டையில் சிறுவர்களின் உடல் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து தேனி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தீயணைப்புத்துறையினர் வரவழைக்கப்பட்டு சிறுவர்களின் உடல்களை சடலமாக மீட்டனர். பின்னர் இருவரது உடல்களும் தேனி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    பாதுகாப்பு இல்லாத குட்டை மற்றும் நீர்நிலைகளில் சிறுவர்கள் மூழ்கி உயிரிழப்பது தொடர் கதையாகி வருவதால் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • பரூச் மாவட்டம் முல்லர் கிராமத்தை சேர்ந்தவர்கள் அங்குள்ள கடற்கரைக்கு சுற்றுலா சென்றனர்.
    • 6 பேரும் கடலில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். இதில் 4 பேர் இளம் வயதுடையவர்கள்.

    சூரத்:

    குஜராத் மாநிலம் பரூச் மாவட்டம் முல்லர் கிராமத்தை சேர்ந்தவர்கள் அங்குள்ள கடற்கரைக்கு சுற்றுலா சென்றனர். பின்னர் அவர்கள் கடலில் இறங்கி உற்சாகமாக குளித்தனர். அப்போது 8 பேர் கடல் அலையில் சிக்கி தண்ணீரில் மூழ்கினார்கள். இது பற்றி அறிந்ததும் மீட்பு படையினர் விரைந்து சென்று அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

    கடலில் தத்தளித்த 2 இளைஞர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மற்ற 6 பேரும் கடலில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். இதில் 4 பேர் இளம் வயதுடையவர்கள்.

    இவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

    • ராட்சத அலையில் சிக்கிய முகமது அலி ஜின்னா கடலில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.
    • போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருவொற்றியூர், காலடிப்பேட்டை, பூங்கா வனபுரம், 4-வது தெருவை சேர்ந்தவர் முகமது அலி ஜின்னா (வயது50). தொழிலாளி. இவர் சாலை ஓரத்தில் தங்கி வாழ்ந்து வந்தார். இன்று அவர் திருவொற்றியூர் ஒண்டி குப்பம் கடற்கரைக்கு சென்றார்.

    அப்போது ராட்சத அலையில் சிக்கிய முகமது அலி ஜின்னா கடலில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். திருவொற்றியூர் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மாளிகைப்பாறை பூசாரி கார்மேகத்தைப் பற்றி அறிந்த ஆறுமுகம் அவரிடம் தனது மகனை சிகிச்சைக்கு அழைத்து வந்தார்.
    • தண்ணீரிலேயே இறந்து விட்டதால் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா வருசநாடு அருகே உள்ள உப்புத்துறையைச் சேர்ந்தவர் கார்மேகம் (வயது 48). இவர் அங்குள்ள மாளிகைப்பாறை கருப்பசாமி கோவில் பூசாரியாக உள்ளார். மேலும் தனது தோட்டத்தில் மூலிகைகளைக் கொண்டு மனநலம் பாதித்தவர்கள், மூட்டு பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சித்த வைத்தியம் மூலம் சிகிச்சை அளித்து வருகிறார்.

    சதுரகிரி கோவிலுக்கு செல்லும் சாலையில் உள்ள இவரது தோட்டத்தில் பல்வேறு ஊர்களைச் சேர்ந்தவர்கள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்நிலையில் விழுப்புரத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் வெங்கடேசன் (22) என்பவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டு இருந்தது. மாளிகைப்பாறை பூசாரி கார்மேகத்தைப் பற்றி அறிந்த ஆறுமுகம் அவரிடம் தனது மகனை சிகிச்சைக்கு அழைத்து வந்தார்.

    நேற்று மாலை அங்குள்ள தோட்டத்தில் வெங்கடேசன் அமர்ந்திருந்தார். அப்போது திடீரென தரைமட்ட கிணற்றில் தவறி விழுந்தார். உடனே அருகில் இருந்த ஆறுமுகம் அவரை மீட்க முயன்றார். கிணறு ஆழமாக இருந்தது. கிணற்றில் இருந்த படிக்கட்டில் தொங்கிபடியே வெங்கடேசன் அலறினார். உடனே ஆறுமுகம் அருகில் இருந்தவர்களை அழைத்து வருவதற்காக சென்றார்.

    ஆனால் அதற்குள் வெங்கடேசன் தண்ணீரில் மூழ்கினார். இது குறித்து கடமலைக்குண்டு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். மேலும் மயிலாடும்பாறையில் இருந்து தீயணைப்பு வீரர்களும் அங்கு விரைந்தனர். அவர்கள் இரவு 11 மணி வரை வெங்கடேசனை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

    அதன் பிறகு வெங்கடேசன் உடல் கயிறு கட்டி வெளியே மீட்கப்பட்டது. தண்ணீரிலேயே இறந்து விட்டதால் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து கடமலைக்குண்டு போலீசார் வழக்கு பதிவு செய்து பூசாரி கார்மேகத்திடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கண்மாய் கரையோரம் சிறுவர்களின் சைக்கிள் நிற்பதை பார்த்த சிலர், உடனடியாக ஊருக்குள் சென்று தகவல் கூறினர்.
    • ஒரே கிராமத்தை சேர்ந்த அண்ணன், தம்பி உள்ளிட்ட 3 மாணவர்கள் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்த கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

    விளாத்திகுளம்:

    தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே சிவலார்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் மகேஷ்குமார் (வயது11) அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தான். இவனது தம்பி அருண்குமார் (7).

    நேற்று மாலை அண்ணன், தம்பி இருவரும் அதே பகுதியை சேர்ந்த தங்களது நண்பனான கார்த்திகேயன் மகன் சுதனுடன் (7) அங்குள்ள கண்மாய் பகுதியில் விளையாட சென்றனர். இவர்கள் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் அப்பகுதியில் தேடினர்.

    இந்நிலையில் கண்மாய் கரையோரம் சிறுவர்களின் சைக்கிள் நிற்பதை பார்த்த சிலர், உடனடியாக ஊருக்குள் சென்று தகவல் கூறினர். இதையடுத்து கிராமமக்கள் அங்கு வந்து பார்த்தபோது கண்மாய் நீரில் மாணவர் அருண்குமார் உடல் மிதந்தது. இதைத்தொடர்ந்து கிராமமக்கள் கண்மாய் தண்ணீரில் இறங்கி தேடினர். இதில், மகேஷ் மற்றும் சுதன் ஆகியோரின் உடல்களும் மீட்கப்பட்டன.

    தகவல் அறிந்து அங்கு சென்ற புதூர் போலீசார் 3 மாணவர்களின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    கடந்த சில நாட்களாக பெய்த கோடை மலையில் கண்மாயில் நீர்வரத்து ஏற்பட்டு தண்ணீர் இருந்துள்ளது. இதில், கண்மாய் அருகே விளையாட சென்ற மாணவர்கள், குளிப்பதற்காக இறங்கி உள்ளனர். அப்போது அருண்குமார் நீரில் மூழ்கி உள்ளான். இதனை பார்த்த மகேஷ்குமார் மற்றும் சுதன் ஆகியோர், சிறுவனை அருண்குமாரை காப்பாற்ற சென்றுள்ளனர். ஆனால் தண்ணீர் அதிகளவில் இருந்ததால் அவர்களும் நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.

    இது தொடர்பாக புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே கிராமத்தை சேர்ந்த அண்ணன், தம்பி உள்ளிட்ட 3 மாணவர்கள் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்த கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

    • திருப்பத்தமா திடீரென எதிர்பாராத விதமாக குளத்தில் தவறி விழுந்து தத்தளித்தார். இதனைக் கண்ட அவரது சகோதரிகள் சந்தியா, தீபிகா இருவரும் அக்காவை காப்பாற்ற முயற்சி செய்தனர்.
    • போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சிறுமிகள் பிணத்தை மீட்டு பிரத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், வனபர்த்தி மாவட்டம் தடிபாமுலாவை சேர்ந்தவர் கந்தம் குருமன்னா. இவருடைய மகள்கள் திருப்பத்தம்மா (வயது 12), சந்தியா (9), தீபிகா (7) ஆகியோர் அங்குள்ள அரசு பள்ளியில் படித்து வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று காலை சிறுமிகள் 3 பேரும் வீரா சமுத்திரம் பகுதியில் உள்ள குளத்தில் துணி துவைக்க சென்றனர்.

    அப்போது திருப்பத்தமா திடீரென எதிர்பாராத விதமாக குளத்தில் தவறி விழுந்து தத்தளித்தார். இதனைக் கண்ட அவரது சகோதரிகள் சந்தியா, தீபிகா இருவரும் அக்காவை காப்பாற்ற முயற்சி செய்தனர்.

    அப்போது 3 பேரும் தண்ணீரில் மூழ்கி உயிருக்கு போராடினர். காப்பாற்றுமாறு கூச்சலிட்டனர். சிறுமிகள் 3 பேரும் தண்ணீரில் மூழ்கி இறந்தனர்.

    அப்பகுதி வாலிபர்கள் குளத்தில் இறங்கி நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு 3 சிறுமிகளின் பிணங்களை மீட்டனர்.

    சிறுமிகளின் பிணத்தைப் பார்த்து அவரது பெற்றோர்கள், உறவினர்கள் கதறி அழுதது கல் நெஞ்சையும் உருக்குவதாக இருந்தது.

    இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சிறுமிகள் பிணத்தை மீட்டு பிரத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • மாணவன் உடலை கைப்பற்றிய போலீசார் தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • தேவதானப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    தேவதானப்பட்டி:

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே உள்ள சின்னமுட்டில் பகுதியைச் சேர்ந்த சந்திரசேகர் மகன் அருண் பல்லவ் (வயது 19). இவர் தேனி மாவட்டம் குள்ளப்புரத்தில் உள்ள தனியார் வேளாண்மை தொழில்நுட்ப கல்லூரியில் விடுதியில் தங்கி 2ம் ஆண்டு இளநிலை பட்டபடிப்பு படித்து வந்தார். இவர் தனது நண்பர்களுடன் கல்லூரி வளாகத்தில் உள்ள ஒரு கிணற்றில் குளிக்கச் சென்றார். அப்போது தண்ணீரில் மூழ்கி அருண் பல்லவ்வை அவரது நண்பர்கள் மீட்டு வைகை அணை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

    அவரை பரிசோதித்த டாக்டர்கள் மாணவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து மாணவனின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மாணவனின் தந்தை சந்திரசேகர் ஜெயமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். தனது புகாரில் தனது மகன் இறந்ததாக கூறப்படும் கிணற்றில் 20 அடி ஆழம் மட்டுமே உள்ளது என்றும் அதில் 7 அடி தண்ணீர் மட்டுமே உள்ளது என்றும் தனது மகனுக்கு நீச்சல் நன்றாக தெரியும். அவ்வாறு உள்ள நிலையில் எப்படி நீரில் மூழ்கி இறந்திருக்க முடியும்? எனவே எனது மகன் சாவில் சந்தேகம் உள்ளது. கல்லூரி நிர்வாக பொறுப்பாளர்கள் மற்றும் சக மாணவர்களிடம் தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

    அதன் பேரில் மாணவன் உடலை கைப்பற்றிய போலீசார் தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அருண் பல்லவ் உயிரிழந்த கிணறு மற்றும் சக மாணவர்கள் ஆகியோரிடம் மாவட்ட எஸ்.பி. பிரவீன் உமேஷ் டோங்கரே விசாரணை மேற்கொண்டார். தேவதானப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • தெர்மாகோல் அட்டையை எடுப்பதற்காக தண்ணீருக்குள் சென்றதாக கூறப்படுகிறது.
    • மாணவன் மரணம் குறித்து மீஞ்சூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பொன்னேரி:

    பொன்னேரி அருகே உள்ள நாலூரை சேர்ந்தவர் அருள்நீதி. இவரது மகன் பிரேம்(12), அங்குள்ள அரசு பள்ளியில் ஏழாம் வகுப்பு பயின்று வந்தான். இந்நிலையில் பிரேம் இன்று தனது நண்பர்களுடன் நாலூர் இந்துஜா நகர் அருகே உள்ள ஏரியில் குளிக்க சென்றுள்ளான். அப்பொழுது தான் வைத்திருந்த தெர்மாகோல் அட்டையை எடுப்பதற்காக தண்ணீருக்குள் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது ஆழத்தில் சிக்கி தண்ணீரில் மூழ்கியுள்ளான்.

    உடன் இருந்த நண்பர்கள் தனது நண்பனை காணவில்லை என நீருக்குள் மூழ்கி தேடி சிறுவனை கரைக்கு கொண்டு வந்துள்ளனர். பின்னர் உடனடியாக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து பரிசோதித்தபோது மாணவன் பிரேம் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இச்சம்பவம் குறித்து மீஞ்சூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுவன் ஏரியில் குளிக்கும்போது இறந்த செய்தி அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ×